செந்தில் மற்றும் கணேசன் இருவரும் படகில் கடலின் நடு பகுதி வரை செல்கின்றனர்.
"எல்லா சரியா இருக்குல"
என்று செந்தில் படகின் ஒரு முனையில் நின்று கொண்டு கணேசனிடம் கேட்க,
"பயப்படவே தேவல" கணேசன் ஒரு வித தோரணையில் பதிலளிக்கின்றான்.
"என்ன எளவு டா இது, இவனுக இஷ்டத்துக்கு நேரத்துக்கு நேரம் எல்லாத்தையும் மாத்துறானுக நம்ம தான் கெடந்து அடிப்படனும்" என்று சங்கர் கூற, புகை பிடித்து கொண்டே செந்தில்
"இன்னைக்கு நைட்டே கடலுக்கு இறங்கி அவனுகளா இல்ல நம்பலானு பார்த்துருவோம் என்னடா கணேசு"
என்று செந்தில் கூற மற்ற இருவரும் ஒப்பு கொள்ளும் பாணியில் மெளனத்தினை வெளிப்படுத்துகின்றனர்.
திடீரென தூரத்தில் இருந்து "செந்திலு என்ன டா இந்த நேரத்துல கடலுக்கு இறங்கிட்ட, குடிச்சிட்டு சொன்னனு பாரத்தா" என்று ராமையா தாத்தா அவருடைய படகில் இருந்து சிரித்து கொண்டே கூறுகின்றார்.
கணேசன் சிரித்து கொண்டே "விடிஞ்ச விஷயம் தெரிய போகுது" என்று ராமையாவின் பேச்சை இடைமறித்து பேசிவிட்டு அவர்களை தாண்டி செல்கின்றனர்.
"நம்ம நிலமைக்கு இந்த மாதிரி விசயம் எல்லாம் தேவய அப்பறம் வாழ விடமாட்டாங்க" என செல்வி கூற,
கணேசன் சிரித்து கொண்டே வலையை எடுத்து கொண்டு வெளியே வந்து "இங்க பாரு இவனுக நமக்கு ஒன்னு தெரியலனு நினைச்சுக்கிட்டு இருந்த காலம் போய் இப்ப என்ன பேசி சமாளிக்குறதுனு தெனறிட்டு இருக்கப்போ இதெல்லாம் சகஜம்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் கிளம்புகிறான்.
"இது நம்ம எடம்னு நினைச்சு வந்த அடுத்தவன் குடுக்குற காசுக்கு நம்மலயே நாயாக்குறானுங்க"
காலில் குத்திய கம்பியில் ஏற்பட்ட ரத்தத்தோடு தன் ஆதங்கத்தை கடலின் நடுவே மறித்த அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படுத்தி சாய்ந்த படி செந்தில் இருக்க,
கணேசன் வேகமாக படகை செலுத்தி கொண்டு போகின்றான்.
"இவனுக நாட்ட பெருசாக்குறேனு இதுவரைக்கும் செஞ்சது பத்தாம அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம பொழப்புலயே கைய வச்சுடானுக, இதுல இவனுகள நம்பி இருந்தானுகள அவனுகளுக்கும் இப்ப எரிச்சல கெளப்பி இருக்கும்" கோவம் கலந்த கேளி பேச்சில் கட்டு மரத்தில் உட்கார்ந்து கொண்டு ராமையா பேசுகின்றார். அந்த பேச்சின் யோசனையில் கிளம்பி சங்கர், கணேசன் மற்றும் செந்தில் மெதுவாக நடந்து வருகின்றனர்.
"இந்த பாரிய திட்டமானது நாட்டின் வளத்தை மேம்படுத்தவதோடு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகின்றது" வானொலியில் சொல்ல,
அதை கேட்டு கொண்டு செந்தில் புகையும்,காபியுமாக கடலின் இரவு இரைச்சலோடுதனியே யோசித்து கொண்டு இருக்கின்றான்.
"நீ தனியாளு வேற இந்த மாதிரி பண்ண போய் செத்துராத" என்று பெட்டி கடை முருகேசன் கூற,
"நம்ம இருக்க இங்கேயே ஆயிரத்தெட்டு கண்டிசன போட்டுட்டு அடுத்தவனுக்கு தூக்கி குடுக்குறான்ல" கோவமாக செந்தில் சொல்ல,
அருகே வந்த கணேசன் "என்னனே இங்க பேசிட்டு இருக்க வா போவோ" என்று செந்திலை அழைத்து கொண்டு கரை பக்கமாக செல்கின்றனர்.
"நம்ம கிட்ட இருக்க வேண்டியது இருந்த நம்ம சொல்ரதயும் கேப்பானுக" ஆதங்கத்தை வெளிப்படுத்தியவாறு படகை செலுத்துகின்றான்.
இது போதாது என்று செந்தில் உணர்ச்சியை வெளிப்படுத்தி கொண்ட "நமக்காக பேச எவனும் வர போறது இல்ல அப்பிடி இருந்த இங்க ஏற்கனவே இருக்க பிரச்சன எல்லாம் காணம போய் இருக்காது" செந்தில் கூறுகின்றான்.
"உள்ளயே வச்சு கதய முடிக்கவா அவங்களுக்கு தெரியாது நம்ம எளவு என்ன நேரமோ வேற பெரிய பிரச்சன இவங்க தலையில விழ நம்மள விட்டுடானுக வாய தொறந்து கேட்ட அவ்வளவு தான் என்னா பதவி தான் இல்லாமா போச்சு " வசையுடன் கூடிய சிரிப்பினில் பெட்டி கடை முருகேசன் கடை முன்னாடியில், செந்திலின் விடுதலை அறிந்து பேச வந்த கணேசனுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் புகைத்தப்படி கதையை விவரித்தான்.
கூட்டம் கலைய "இது என் அப்பாவுக்கு நடந்துச்சு தப்பிக்க அன்னைக்கு வேற பிரச்சன இருக்கல ஒரே பிரச்சன தான்,ஆனா இன்னைக்கு அப்பிடி இல்லனு சொல்லிற முடியாது" என ஒருமையில் கணேசன் மற்றும் சங்கருக்கு செந்தில் சொல்லி முடிக்கின்றான்.
படகின் வேகத்தினை குறைத்து கொண்டு திடீரென கணேசன் கடலில் குதித்து உயிரை மாய்த்து விட்டான்.
முற்றும்.
எழுத்து
ராஜேந்திரன் ஜீத் ஹம்ஷன்..
(இது சிறுகதை மஞ்சரி எனும் மாத சஞ்சிகையில் ஏலவே வெளிவந்த சிறுகதை ஆகும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக